ஈழத் தமிழர்களை அசிங்கப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட குப்பை திரைப்படம்! கடும் கோபத்தில் அமீர்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று தமிழர் போராட்டம், அதன் வலிகளை சொல்லாமல் குத்துப் பாடல் கலந்த குப்பை படமாக தயாரிக்கப்பட்டிருந்ததாக பிரபல இயக்குநர் அமீர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.சி தொலைக்காட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறும்பட இயக்குநர்களுக்கான விருது வழங்கும் விழாவில் அமீர் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டார்.

27 வருடங்களாக இலங்கை ஆட்சி செய்த விடுதலைப் புலிகளை சார்ந்த திரைப்படம் ஒன்றை உருவாக்காமல் குப்பைகள் நிறைந்த திரைப்படத்தை உருவாக்கியதாக அவர் ஆதங்கப்பட்டார்.