மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை?

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டு வளாகத்தில் மனித தலையயொன்று கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த மனித தலை யாருடையது என்பது குறித்து விசேட அதிரடிப்படையினரும், குற்றப்புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் இன்று காலை வெடிப்பு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 27 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது குண்டு வெடிப்பு இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டு வளாகத்தில் மனித தலையயொன்று கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும், குற்றப்புலனாய்வு பிரிவினரும் விரைந்துள்ளதாகவும், அந்த தலை யாருடையது என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகம் தெரியவந்துள்ளது.