தாயும் மகளும் கொடூரமாக கொலை

இரத்தினபுரி - ஏகொடமல்வல பிரதேச வீடு ஒன்றில் இரு பெண்கள் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

43 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் 75 வயதுடைய அவரது தாயாரும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மகளின் கள்ளகாதலனினால் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.

சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.