மட்டக்களப்பில் இல்மனைற் அகழ வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் சட்டவிரோதமாக இல்மனைற் அகழ வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது.

48 கிலோமீற்றர் நீளமான கடற்கரையில் இவ்வாறு இல்மனைற் அகழுவதை நிறுத்துமாறு கோரியே மக்கள் இந்த போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.

கடற்கரையில் 100 மீற்றர் ஆழத்திற்கு இல்மனைற் அகழப்பட இருப்பதால் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதாகவும், இதனால் வாகரைப் பிரதேசம் முழுவதும் அழிவடையும் அச்சம் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்து கொண்டுள்ளனர்.

.