முறிந்து விழுந்த அரச மரத்தின் கிளை! சிறுவர் மூவர் காயம்!

அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஆரம்ப பாடசாலை சிறுவர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தசம்பவம் நாரம்மல , பகுமுனே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த முன்று சிறுவர்களும்தற்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆரம்ப பாடசாலை சிறுவர்கள் குழுவாக சென்று கொண்டிருந்த போது குறித்த அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.