பிரபல பாதாள உலககுழு உறுப்பினர் கைது!

பிரபல பாதாள உலககுழு உறுப்பினர் ஹீனடியன சங்கா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பிரதேசத்தில் களு அஜித் என்பவர் அண்மையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஹீனடியன சங்கா கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.