பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 178 பேரின் குடும்பத்தவர்களுக்கு இழப்பீடு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 178 பேரின் குடும்பத்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இழப்பீட்டு தொகையாக அவர்களிற்கு 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை வழங்கப்படவுள்ளது.

அத்துடன் காயமடைந்த 345 பேருக்கு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு அமைய இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக இழப்பீடுகளுக்கான அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்காக தலா பத்து லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குண்டுவெடிப்புச் சம்பவங்களினால் சேதமடைந்த மூன்று தேவாலயங்களையும் மறுசீரமைக்கவென இரண்டு கோடி 50 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.