முல்லைத்தீவில் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்யை தினம் குறித்த இடத்தின் காணியினை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது நிலத்தில் புதைந்த நிலையில் இரண்டு தமிழன் குண்டுகள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில், அங்கு சென்ற பொலிஸார் தமிழன் குண்டினை அடையாளப்படுத்தி அதனை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.