ஹட்டனில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவர் கைது!

ஹட்டனில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவகளில் பிரதான சந்தேக நபர் 24 வயதுடைய திருமணமாகாத நோர்வூட் வெஞ்சர் தோட்ட பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் கொழும்பில் இருந்து போதைப்பொருள் கொண்டு வந்து ஹட்டனில் விற்பனை செய்யப்படுவதாகவும் தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அவரிடமிருந்து 7 ஹெரோயின் பக்கெட்டுகள் மீட்கபட்டுள்ளதாகவும் ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் ஹெரோயின் பக்கெட்டுகளை தமது உடம்பு பகுதியில் மறைத்து வைத்து இருந்ததாகவும் அவரின் ஊடாக மேற்கொண்ட விசாரணைகளின் போது ஹட்டன் சமனல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மேலும் இரண்டு ஹெரோயின் பக்கெட்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளான.

அதோடு மேலதிகமாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளதோடு, 9 ஹெரோயின் பக்கெட்டுகளும் மீட்கபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைது செய்யபட்ட நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.