2 மணித்தியாலத்திற்குள் வீதியின் நிரல் சட்டத்தை மிறிய 582 பேர்!

கடந்த இரு தினங்களிற்கு முன்னர் பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

வாகன நெரிசல்கள் மற்று வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வீதியின் நிரல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 582 பேர் மீது குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நேற்று மாலை 2 மணித்தியாலத்திற்குள் 582 பேர் வீதியின் நிரல் சட்டத்தை மிறியதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.