சுகாதார அமைச்சருக்கு எதிராக முல்லைத்தீவிலும் போராட்டம்!

சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்தினவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடம் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்று இடம்பெற்றது.

இதன் போது பதாதைகளுடன் ஒன்று கூடிய வைத்தியர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் துண்டுப்பிரசுரமும் வீதியில் செல்பவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், ஒளடத அதிகாரத்தை மாபியாவிடத்தில் கையளிக்காதே, இலங்கை மருத்துவ சங்கத்திற்கு அரசியல் தலையீடு செய்யாதே, போன்ற பல்வேறு பதாதைகளுடன் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.