யாழில் அரச வாகனத்தில் மனைவியை ஏற்றிய அரசியல் பிரபலத்திற்கு நேர்ந்த கதி

வலி. கிழக்கு பிரதேச சபையில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சபையின் வாகனத்தை தனது சொந்த பயன்பாட்டிற்கு சபையின் ஆளுகைக்கு உட்படாத வேலைகளிற்கு பாவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் திரு .தவநாயகம் பிரேரனையை ஒன்றை சபையில் சமர்ப்பித்து இருந்தார்.

எனினும் குறித்த பிரேரனை சபையில் விவாதத்திற்கு எடுக்கும் போது குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தனது சொந்த கட்சி உறுப்பினருக்கு எதிராக கொண்டுவந்த பிரேரனை காரணமாக சபையில் இருந்து வெளியேறினார் .

இருந்த போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் வேறு கட்சி உறுப்பினர்கள் இந்த பிரேரனையை விவாதத்திற்கு எடுத்தனர்.

அப்போது கருத்து கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் திரு. திருக்குமாரன் தமது மது கட்சி யாழ் மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கவில்லை என்றும், யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் சொந்தமாக ஒரு இடத்தினை கொண்டு இருந்தும் அதற்கு வரி செலுத்தும் போதும் அவரது வதிவிடம் மாநகர எல்லைக்குள் இல்லை என இதே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வழக்கை தாக்கல் செய்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் வலி கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் எமது தவிசாளருக்கும் வாக்கு உரிமையும் இல்லை அவரது வதிவிடமும் வேறு ஒரு பிரதேச சபைக்கு உட்பட்டே இருப்பதனால்தான் இந்த தவறான நடவடிக்கைகள் நடைபெறுகிறது எனவும் கூறினார்.

இந்நிலையில் தொடர்ந்து அவரை பேசுவதற்கு அனுமதிக்காமல் சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர்.

அதன் பின்னர் பேசிய உறுப்பினர்கள் தவிசளரின் மனைவி சாவகச்சேரி பகுதியில் வேலைக்கு சொல்லதற்கும் சபையின் வாகனமும் சபை பணத்தில் எரிபொருளும் பாவிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட தவிசாளர் அதற்கான இழப்பீட்டுத்தொகையினை தாம் சபைக்கு செலுத்துவதாக ஒப்புதல் அளித்துள்ளார்.