பெரும்பான்மை இளைஞர்கள் தாக்குதல் -வாரியபொலவில் பாதுகாப்பு அதிகரிப்பு

வாரியபொல மிரிஹம்பிடிய அமைதியின்மையை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மிரிஹம்பிடியவில் பெரும்பான்மை இளைஞர்கள் சிலர் அங்குள்ள பளிவாசலுக்கு சென்று ஹிப்ல் மதரஸா நடக்கும் இடத்தை நோட்டமிட்டுள்ளனர்.

அதோடு குறித்த இடம் அடிப்படைவாதம் போதிக்கப்படும் இடம் என கூறி சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அப்பிரதேச முஸ்லிம் சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளதை தொடர்ந்து அங்கு முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த ஒருவர் காயமடைந்து வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.