யாழில் கற்றாளை பிடுங்கியவர்களிற்கு நேர்ந்த கதி!

யாழ்.மண்கும்பானில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கற்றாளைகள் பிடுங்கபடுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் வெளிமாவட்டத்தை சேர்ந் இரு இஸ்லாமிய நபர்கள் எனவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.