5 நாட்களாக பரிதவித்த யானையின் நிலை!

வவுனியா பாலமோட்டை குளத்துக்கு அருகே கடந்த ஜந்து தினங்களாக யானை ஒன்று நடக்க முடியாமலிருந்தது.

அதனை அவதானித்த கிராம மக்கள் ஓமந்தைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைக்கு அருகில் அவதானித்தனர்.

இதன்போது காயம் ஏற்பட்டமையினால் யானை அவ்விடத்தை விட்டு செல்லவில்லை என்றும் ,கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதில் யானைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யானைக்கு, கால்நடை வைத்தியரால் சிகிச்சை வழங்கப்பட்டு சுமார் இரண்டு மணித்தியாலயங்களின் பின்னர் யானை மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.