கிழக்கு மக்களிற்கு முக்கிய அறிவித்தல்! நாளை நாள் இடம் பெறும் இந்த விடயம்

கிழக்கில் நாளை பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவையால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் முழு ஆதரவையும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.