வீதியை மூடுவதற்கு யாழ் மாநகரசபை முயற்சி - மக்கள் எதிர்ப்பு

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட நெளுங்குளம் – 505வது குறுக்கு வீதியை மூடுவதற்கு இன்று காலை மாநகரசபை எடுத்து முயற்சி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

குறித்த வீதியை மூடுவதற்காக வருகைதந்த மாநகரசபை உத்தியோகத்தர்கள் மக்களின் எதிர்ப்புக் காரணமாக திரும்பிச் சென்றுள்ளனர்.

கடற்கரைக்குச் செல்வதற்கான குறித்த குறுக்கு வீதி யாழ்.மாநாகர சபையின் அனுதியுடன் கடந்த 2015ம் ஆண்டு திறக்கப்பட்டு செப்பனிடப்பட்டிருந்தது.

எனினும், 2019ம் ஆண்டு நகர அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் குறித்த வீதி மூடப்பட வேண்டும் எனத் தெரிவித்து அப் பிரதேச மக்களுக்கு யாழ்.மாநகர சபையால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,

அதனையடுத்து, பொதுமக்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் செய்ய முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த நடவடிக்கையை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதால், வீதியை மூடும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைக்குமாறு யாழ்.மாநகர முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நெளுங்குளம் 505 குறுக்கு வீதியை மூடுவதற்கு யாழ்.மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.