கதிா்காமத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்!

கதிா்காமத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 26 வயதான பாடசாலை ஆசிாியா் ஒருவா் பாரவூா்தியுடன் மோதியதில் உயிாிழந்துள்ளாா்.

விபத்தில் கும்புக்கென 7ம் ஏக்கர் பகுதியில் வசித்த 26 வயதான குசேலன் கேதிஷஸ்வரன் என்ற ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.

மொனராகலை- ஹொரெம்புவ பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை ஆசிாியாின் மோட்டாா் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பாரவூா்தியுடன் மேதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளட்து.

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 26 வயதுடைய திருமணமாகாத குறித்த ஆசிரியர் கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்று உந்துருளியில் திரும்பிக்கொண்டுருந்த வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை கும்புக்கென 7 ம் ஏக்கரில் இருந்து பல்லைகழகம் சென்று பட்டம் பெற்ற ஒரே ஒரு ஆசிரியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.