வவுனியாவில் தப்பி சென்ற வாகனத்தை துரத்திப் பிடித்த இளைஞர்கள்

வவுனியா- மன்னார் பிரதான வீதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தை துரத்திப் பிடித்த பிரதேச இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று , வேப்பங்குளம் பகுதியில் பின்புறமாகப் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வானின் சாரதி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதை அவதானித்த மக்கள், வானைப் பின் தொடர்ந்து சென்று மடக்கிக் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.