கம்ஹாவில் ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான்!

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இந்த எச்சரிகையினை சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறித்த பகுதிகளில் வீசப்படும் ரம்புட்டான் தோல்களே இதற்கு காரணமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரம்புட்டான் உட்கொள்ளும் பலர் அதன் தோல்களை வீதியில் வீசிவிட்டு செல்வதனை பழக்கமாக்கி கொண்டுள்ளதாகவும், இந்த தோல்களில் தேங்கும் நீரில் டெங்கு நுளம்பு முட்டையிடுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக ரம்புட்டான் தோல்களை உரிய முறையில் சேகரித்து கழிவுப்பொருட்களுடன் சேர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்வேளை இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயின் காரணமாக நாட்டில் 32 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.