வெளியே சென்ற இளைஞன் ஹைஏஸ் வாகனத்திற்குள் சடலமாக

நாவலப்பிட்டியில் ஹைஏஸ் வாகனத்திற்குள் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நாவலப்பிட்டியில் உள்ள ரம்புக்பிட்டியில் வசிக்கும் 36 வயதுடைய எஸ்.எம்.ஆர்.அசங்க பண்டாரா சமரதுங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவர் சாரதியாக தொழில்புரிந்து வந்ததாகவும், நேற்று மாலை நண்பருடன் வெளியில் சென்றுள்ளார்.

அதன்பின்னர் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்தவர்கள், உயிரிழந்தவரின் தந்தையிடம் வாகன திறப்பை ஒப்படைத்து அவரது மகன் வாகனத்திற்குள் உறங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நீண்டநேரமாகியும் மகன் வாகனத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த தந்தை, அம்யூலன்சிற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அங்கு சென்ற மருத்துவகுழுவின் பரிசோதனையின் பின்னரே குறித்த நபர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை உயிரிழந்தவர் போதைக்கு அடிமையானவர் என கூறிய நாவலபிட்டி பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.