பிரபல பாடசாலையில் வழங்கப்பட்ட குளிர் பானங்களில் இறந்த புழுக்கள்!

திருகோணமலை பிரபல பாடசாலை ஒன்றின் கலைநிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது வழங்கப்பட்ட குளிர் பானத்துக்குள் அழுக்கு நிறைந்த படிமங்களுடன், இறந்த நிலையில் புழுக்களும், எறும்புகளும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த விடயம் உடனடியாக பொதுச்சுகாதார பணியக, மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகரிடம் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தாகம் எடுப்பதாக நினைத்து குளிர்பானம் அருந்தும்போது அவதானமாக பாருங்கள். இல்லையேல் இவ்வாறான நிகழ்வுகள் நமக்கும் நேரலாம்.