முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.

அங்கு நேற்று வீசிய காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 13 வீடுகள் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில்குறித்த வீடுகளை புனரமைப்பதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தாம் தொடர்பு கொண்டிருப்பதாக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அதற்காக சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , குறித்த வீடுகளை புரமைப்பதற்கு 130 000 ரூபா நிதியை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதே வேளை பல மாதகாலமாக நிலவிய வரட்சிக்கு பின்னர் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.