புலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது! சொன்னவர் யார் தெரியுமா?

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழலைகூட மிதிக்காதவர்கள் இன்று அவர்களின் வரலாற்றை எழுதுகிறார்கள் என்றும் மற்றவர்களை விட புலிகளுடனான தொடர்பை அதிகம் அறிந்தவன், அதை எழுத ஆரம்பித்தால் நாடு தாங்காது எனவும் மாவை சேனாதிராசா கூறியுள்ளார்.

அமிர்தலிங்கத்திற்கு அஞ்சலி நிகழ்வில் நேற்றை தினம் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் , அமீரண்ணை போராளிகளை ஊக்கப்படுத்தியதாகவும், தம்பியையும் (பிரபாகரன்) அவர் சந்தித்ததாகவும், இந்தியாவில் இருந்தும் அவர் அவர்களை ஊக்கப்படுத்தியதாகவும் மாவை கூறியுள்ளார்.

எனினும் காலம் தவறாக கையாளப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில் அவர் இன்றுவரை இயக்கத்தை கொண்டு நடத்தியிருக்கும் நிலைமை இருந்திருக்கும் எனவௌம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலருக்கு இந்த வரலாறு தெரியாது என்றும் கூறிய மாவை , எனக்கு நன்றாக தெரியும் எனவும், ஆனால் எல்லாவற்றையும் எழுதுவது கடினமாக இருக்கிறது.

புலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது எனவும் கூறியுள்ளார்.

மேலும் கடந்தமாதம் இந்தியாவில் பழ நெடுமாறனை சந்தித்தபோது, அவரும் இதையெல்லாம் எழுதும்படி தன்னிடம் வலியுறுத்தியதாகவும், மாவை சேனாதிராசா இதன்போது தெரிவித்துள்ளார்.