இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! இயர்போன் பாவிப்போருக்கு அபாய எச்சரிக்கை

தென்னிலங்கையில் கையடக்க தொலைபேசிக்கு இயர்போன் அணிந்துக் கொண்டு உறங்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, பன்னிவல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆனந்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

களுத்துறையில் உள்ள வீடொன்றில் வாழும் அவர் உறங்கிக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக வெளியாகிய தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

களுத்துறை பொலிஸார் மரணம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த நபர் கையடக்க தொலைபேசிக்கு இயர்போன் அணிந்துக் கொண்டு உறங்கியமையே இந்த மரணத்திற்கு காரணமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.