இரத்தினபுரி மற்றும் அதனையண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் அதனையண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களு கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயர்வதனால் இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை மற்றும் வேவெல்வத்த பகுதிகளில் மண் சரிவு குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.