வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள்- ஒருவர் பலி!

அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட பிரதேசத்தில் இரண்டு மாணவிகள் வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகபடுகின்றது.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மற்றொரு மாணவி காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலை நேர வகுப்புச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த மாணவிகள் இருவரும் வீதியால் சென்று கொண்டிருந்த போது, வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...