கருணா குழுவால் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் பொலிசாரின் உடலைத் தேடி தோண்டப்படும் சடலம்..

கடந்த 2008 ஆம் ஆண்டு கருணா குழுவினால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் 11ம் திகதி சடலத்தினை தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் உடலை மீட்க முடியவில்லை.

இந் நிலையில் மீண்டும் இன்று தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் வயது (25) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலையில் இருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில், தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார்.

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர்.

இவர்களிடம் மேற் கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ள நிலையில் மற்றும் இருவர் வெளிநாட்டில் இருப்பதாதாவும் கூறபட்டிருந்தது.

ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தோண்டப்படும் இடத்திற்கு தயானந்தன், தம்பிமுத்து செல்வராசா (மதன்), சந்திரன் சுப்பிரமணியம் (லிங்கன்) ஆகியோர் சம்பவ இடத்திற்கு கடந்த முறை அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது அவர்கல் கூறிய பகுதியில் எந்தவித மனித எச்சங்களும் இது வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.