கடல் மாா்க்கமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஆபத்தான ஆயுதங்கள்! அடுத்த தாக்குதலின் திட்டமா?

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குள் பெருமளவு ஆபத்தான ஆயுதங்கள் கடல்மாா்க்கமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இவற்றை கொண்டு சதி திட்டம் ஒன்று நாட்டில் நடத்தப்படலாம் எனவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் , தென்னிலங்கையில் செயற்படும் பாதாள உலகக் குழுவினருக்கும் கிடைக்கும் வகையில் அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் திட்டமிட்ட பல கொலைகளை செய்வதற்காக குறித்த ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஆயுத பொதியில் ஆர்.பீ.ஜீ துப்பாக்கிகள், டீ 56 ரக துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் என்பன இருந்ததாகவும் , டுபாயில் தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றினால் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பாகிஸ்தானில் செயற்படும் போதைப்பொருள் தரகர்கள் ஊடாக ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது சிறையில் இருக்கும் பாதாள உலக தலைவர் கொஸ்கொட தாரக என்பவரே இந்த கொலை திட்டத்தின் பிரதான இலக்காக உள்ளதெனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த ஆயுதங்களை பயன்படுத்தி பாதாள குழு உறுப்பினர்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.