நல்லூர் தொடர்பில் வடமாகாண ஆளுநர் கொடுத்த உறுதிமொழி- பக்தர்கள் கவலை

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நல்­லூர்க் கந்­த­ன் ஆலயத்திற்கு செல்லும் பக்­தர்­களை இயந்­தி­ரம் மூல­மா­கச் சோதிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என வடக்கு மாகாண ஆளு­நர் தெரி­வித்த்திருந்தார்.

அவர் உறுதிமொழி வழங்கி 5 நாள்­கள் கடந்­து­விட்ட நிலையிலும் அதில் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை என ஆலயம் செல்லும் பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நல்லூரில் ஏரா­ள­மான பக்­தர்­கள் கூடு­வர் என்­பது அனை­வ­ருக்­கும் தெரிந்­தி­ருந்­தும் சோத­னைக் கெடு­பிடிகளிற்கு குறை­வில்லை.

படையினரின் இந்த சோதனை நடவடிக்கையால் காலதாமதம் ஏற்பட்டு நல்லூரானை தரிசிக்கும் நேரம் குறைவதாக கூறி பொலி­ஸா­ரின் சோத­னைக்­குப் பக்­தர்­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­விக்­கின்­ற­னர்.

நல்­லைக் கந்­த­னின் வரு­டாந்த மகோற்­ச­வம் கடந்த 6ஆம் திகதி கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மானது.

இந்த நிலையில் கடந்த எட்­டாம் திகதி வட மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன் நடத்­திய ஊடகவியலாளர் சந்­திப்­பில், உடற்­ப­ரி­சோ­தனை நிறுத்­தப்­பட்டு இயந்­தி­ரம் ஊடான பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டும் என்று உறுதி அளித்­தி­ருந்­தபோதும் இதுவரையும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.