விபத்தில் சிக்கிய மைத்திரியின் மகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிகாவின் வாகனத் தொடரணி விபத்திற்குள்ளாகியுள்ளது.

எனினும் இதில் சத்துரிகா பயணம் செய்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கபடுகின்றது.

எஸ்யுவி கார் ஒன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதி, அதன் பின்னர் டிப்பெண்டர் வாகனத்துடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வெல்லவாயவிலிருந்து மொனராகவல நோக்கி சென்ற முச்சக்கர வண்டியே இதன்போது விபத்திற்குள்ளானது.

காயமடைந்தவர்கள்புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டிபெண்டர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.