வவுனியா நந்திமித்ரகமவில் நேற்றையதினம் மீள்குடியேறிய மக்களிற்கு தென்னைகள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்சி ஏற்பாடாகியிருந்தது.
அமைச்சர் நவீன் திசநாயக்க கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு அருகில், மர்ம நபர்கள் சிலர் தீமூட்டியதால் கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
நிகழ்விற்காக நவீன் திசநாயக்க வந்த போது, நிகழ்விடத்திற்கு அண்மையிலிருந்த காட்டிற்கு இனம்தெரியாத சிலர் தீமூட்டியுள்ளனர். இதனால், எழுந்த கடுமையான புகை காரணமாக கூட்டத்தை நடத்த முடியாத நிலைமையேற்பட்ட நிலையில் அமைச்சர் நவீன் திசநாயக்கவும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருந்த குறித்த விழா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகவே இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அதிகாரிகளும், மக்களும் இணைந்து தீயை அணைக்க கடுமையாக பிரயத்தனப்பட்டனர்.
புகை அங்கு சூழ்ந்தபோதும், அமைச்சர் நவீன் திசாநாயக்க நிகழ்ச்சியின் இறுதி வரை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை காட்டுக்கு தீமூட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது