சல்வார் தாவணியால் பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் கழுத்தில் தாவணி இறுகி பரிதாபமாக பலியாகியுள்ளான்.

குறித்த சம்பவம் இன்று மதியம் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

இதில் 8 வயது சிறுவன் ஒருவரே சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

இதன்போது சல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் கூச்சலிட்டதை அடுத்து அங்கு சென்ற உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்ட போதும் அது பயனளிக்கவில்லை.

இந்த நிலையில் சிறுவனின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.