காண்போரைக் கவரும் நல்லூரானின் அழகிய மணல் சிற்பம் - பல்கலை மாணவியின் கைவண்ணம்!

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தவகையில் நம் ஈழமணித்தி திருநாட்டில் ஆலங்களிற்கும் விழாக்களிற்கும் என்றும் குறைவில்லை.

அந்தவகையில் ஈழத்தின் மணிமகுடமாய் விளங்குகின்ற யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சப்பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது .

இந்நிலையில் இலங்கை வாழ் தமிழர்கள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்களும் நல்லூரானை தசிப்பதற்காக நாட்டிற்கு வந்துள்ளார்கள்.

பல கெடுபிடிகளின் மத்தியிலும் கந்தன் பக்தர்கள் நல்லூரானை சென்று தரிசித்துகொண்டே இருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் யாழ்.பல்கலைக்கழக மாணவி வித்தியா தன்னுடைய கைவண்ணத்தில் மணலில் நல்லூரானின் அழகிய சிற்பத்தினை உருப்பெறச்செய்துள்ளார்.

அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர். அத்துடன் சமூக வலைத்தளங்களும் மாணவி வித்தியாவின் கைவண்னத்தில் உருவான நல்லூரானின் சிற்பம் வைரலாகியுள்ளது.