கார் ஓட்டுநரின் திடீரென பிறேக்கால் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

ஏ9 வீதியுடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பிறேக் போட்டதால் காருக்கு பின்பாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.