நல்லூரான் திருவிழாவில் கலந்து கொண்டமை ஒரு சிறப்பான தருணம் - தென்னிந்திய நடிகை நெகிழ்ச்சி!

அண்மைக்காலங்களில் தென்னிந்திய நடிகர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்கின்றமை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் பிரபல தென்னிந்திய நடிகை சுகன்யா ஆன்மிக பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் பிரசித்தி பெற்ற யாழ். நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று அவர் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று மக்களுடன் மக்களாக நின்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

நல்லூரானை தரிசித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த அவர் , நல்லூர் ஆலயத்திற்கு வந்து வழிபாடுகளில் கலந்து கொண்டமை ஒரு சிறப்பான தருணம் எனவும், தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அத்துடன் நல்லூர் ஆலயத்தை மிகவும் சிறப்பாகப் பராமரித்து வருகின்றமைக்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் பிரபல தென்னிந்திய நடிகை சுகன்யா தெரிவித்துள்ளார்.