வெள்ளத்தில் கிடந்த சடலம்! பொலிஸார் விசாரணை

மஸ்கெலியா- மல்லிகைப்பூ பிரிவில் இனம்தெரியாத ஒருவரின் சடலம் வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு விறகு வெட்ட சென்ற ஒருவர் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடன் சென்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.