தாயை தாக்கியதால் அண்ணனை கொன்ற தம்பி!

தாயை தாக்கியதால் அண்ணனை கூரிய ஆயுதம் ஒன்றினால் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் காலி ,மைத்திரிகம - கணேகொட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

எல்பிட்டி - பகுதியில் 9 மணியளவிலே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

உயிரிழந்த நபர் தினந்தோறும் மது போதையில் வந்து அவரின் தாயாரை தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், நேற்றும் அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாயாரை தாக்கியுள்ளார்.

இதனை அவதானித்த உயிரிழந்தவரின் இளைய சகோதரன் கூரிய ஆயுதம் ஒன்றினால் அண்ணனை தாக்கியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மைத்திரிகம - கணேகொட பகுதியைச் சேர்ந்த பண்டாரிகொடகே சாந்த புஷ்ப குமார என்பவரே இவ்வாறு தம்பியின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இளைய சகோதரனை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.