கோட்டா வந்ததும் மட்டக்களப்பில் மோசடியாளர் மீண்டும் அவதாரம்

களுவாஞ்சிகுடியில் வெளிநாட்டு முகவராக செயற்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரை ஏமாற்றிய சந்திரகுமார் என்பவர் ,கோட்டபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின் மீண்டும் கிழக்கில் பிரசன்னமாகியுள்ளார்.

அத்துடன் குறித்த நபர் இளைஞர்களை ஏமாற்றி பணம் பெற்றதோடு, பல பெண்களின் வாழ்கையை சீரழித்துளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை விடுதலைப்புலிகள் தேடலின் போது குறித்த நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்துவந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் 2009 ஆம் ஆண்டின் பிற்பாடு குறித்த நபர் அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை கடத்திசென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறித்த மோசடிக்காரர் அனுப்பிய 10 பேர் கொண்ட படகு இன்று வரை அவுஸ்ரேலியா போய் சேரவில்லை என்பதோடு, அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பல வழக்குகள் குறித்த நபர்மேல் உள்ளதாகவும், இதுவரை தலைமறைவாகியிருந்த நபர், இப்பொழுது கோத்தபாயவுக்கு ஆதரவாக எடுபிடி வேலை செய்து வருகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே குறித்த மோசடி நபர் தொடர்பில் கிழக்குமாகாண மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.