மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்? வியப்பில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் விசித்திரமான பொருள் ஒன்று பறந்துள்ளது.

வெள்ளை நிறத்திலான பொருள் பறந்து செல்வதை மக்கள் அவதானித்துள்ளனர்.

இன்று காலை முதல் இதனை அவதானிக்க முடிகின்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.

பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் வானில் பறந்த விசித்திர பொருளால் பீதியடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.