மட்டக்களப்பில் கையும் களவுமாக சிக்கிய யாழ் இளைஞன்! இப்படிச் செய்து விட்டாரே..

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு மற்றும் பண்டாரியாவெளியில் தவணை முறையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பணம் மோசடி செய்யும் நபர ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பதிவு கட்டணம் என கூறி பண மோசடியில் அங்கு ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட குறித்த நபர் மக்களை ஏமாற்றி பணத்தை அவர்களின் பணத்துடன் கம்பி நீட்டியுள்ளாதாகவும் பாதிக்கபட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த மோசடி நபரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பாதிகப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இப்படி அப்பாவி மக்களை ஏமாற்றி வாழும் இளைஞர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவருடைய பொறுப்பெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.