யாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்! அதிர்ச்சியில் கடற்படை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்படையினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பகுதியில், வடக்கு கடற்படை கட்டளை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ எடையுள்ள குறித்த பொதியை கண்டுபிடித்தனர்.

அதன் பின்னர் மேலதிக விசாரணைக்காக குறித்த பொதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பொதியில் சி 4 வெடிமருந்து இருந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.