யாழில் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்ட அண்ணன்! லண்டனில் இருந்து வந்தவா் தற்கொலைக்கு முயற்சி

உடன் பிறந்த சகோதரன் செய்த மோசடியால் புலம்பெயர் தேசத்தில் இருந்து யாழிற்கு வந்த அண்ணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

லண்டனில் வசிக்கும் மதன் என்னும் நபர் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பிரமாண்ட வீடொன்றை கட்ட விரும்பி , யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் வசிக்கும் அவரது உடன்பிறந்த சகோதரனிடம் வீடொன்றை கட்ட விரும்புகிறேன் நீ பொறுப்பாக நின்று கட்டித்தருகிறாயா என கேட்டுள்ளார்.

இந்நிலையில் நீங்கள் விரும்பிய வடிவில் வீட்டை பொறுப்பாக நின்று கட்டிதருகின்றேன் நீங்கள் பணத்தை அனுப்புங்கள் என தம்பி பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து வீடு கட்டுவதற்காக பல லட்ஷம் தொகை பணத்தை பகுதி பகுதியாக தனது சகோதரனுக்கு மதன் அனுப்பியிருக்கிறார், சகோதரனும் பதிலுக்கு வீட்டு வேலை செய்ததற்கான புகைப்படங்களையும் தனது அண்ணனுக்கு அனுப்பியுள்ளார், முழுவதுமாக சுமார் ஒரு கோடியளவில் அனுப்பிய நிலையில்

வீடு கட்டி முடிந்துவிட்டதற்கான புகைப்படங்களும் தம்பியிடமிருந்து வந்துவிட்டது.

இந்த நிலையில் ஒருவழியாக எனது சொந்த ஊரில் ஒரு கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டேன் என்ற நிம்மதியுடன் இருந்த மதன் சில மாதங்களுக்கு பிறகு தனது மனைவி குழந்தைகளுடன் கடந்த 19-ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைகிறார் மதன்.

தம்பிக்கு அறிவித்துவிட்டே மதன் தாயகம் திருப்பிய நிலையில், விமான நிலையத்தில் இருந்து தம்பிக்கு போன் எடுக்கிறார். சுமார் 3 மணித்தியாலயங்களாக எந்த பதிலும் கிடைக்கவில்லை, இனி தம்பியை பார்த்துக்கொண்டிருந்து எந்த பயனுமில்லை என்று அவர் ஒரு வாகனத்தை ஹயர் பண்ணி யாழ்ப்பாணத்திற்கு வந்து சேருகின்றார்.

வந்து அவரது மனைவியின் உறவினர் வீட்டில் தங்கியிருந்துகொண்டு மறுநாள் முழுவதும் தம்பிக்கு போன் எடுக்க எந்த பதிலுமில்லை, தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்தும் இரண்டு நாட்களாக காணவில்லை என்றுதான் அவர்களும் பதில் அளித்துள்ளனர்.

என்ன செய்வதென்று திகைத்த மதன், சரி கட்டிய வீட்டையாவது பார்ப்போமென்ற எதிர்பார்ப்பில் சாவகச்சேரி சென்று தனது காணியிருந்த இடத்திற்கு சென்றபோது அங்கு புதிதாக கட்டியவீடு ஒன்றையும் காணவில்லை,

காணியில் பழைய தற்காலிக வீடு மட்டும்தான் இருக்கின்றது.

அதிர்ச்சியடைந்த மதன் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றார். மீண்டும் தம்பியை தொடர்பு கொள்ள முயன்றபோதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை ஒரு கட்டிடத்தில் ஆறுகால்மடம் பகுதியில் உள்ள தம்பி வீட்டிற்கு செல்கின்றார்,

அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது, தான் அனுப்பிய பணத்தில் தான் வடிவமைத்த வீடு அங்கே தம்பிக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டிருக்கிறது.

உடனடியாக திரும்பி வந்த இடத்திற்கே சென்று, தம்பி தன்னை ஏமாற்றியதை நினைத்து அழுதுகொண்டு நள்ளிரவில் தற்கொலைக்கு முயற்சி செய்து குடும்பத்தால் காப்பாற்றப்பட்டு விட்டார். எனினும் தற்போதும் தனக்கு நடந்த நம்பிக்கை துரோகத்தை எண்ணி கண்ணீர் சிந்துகிறார் மதன்.

புலம்பெயர் தேசத்தில் நித்திரையின்றி வாயைகட்டி வயிற்றைக்கட்டி பணம் சேர்ந்து சொந்த நாட்டில் அழகான வீடொன்றை கட்ட நினைத்த அவரின் ஆசை கூடப்பிறந்த சகோதரனால் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.

கூடவே இருந்து குழிபறிக்கும் மதனின் சகோதரன் போல் இன்னும் எத்தனை பேரோ?