யாழ்ப்பாணத்தில் இலவச பஸ் சேவை

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய முதன்முறை யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடைபெறும் யாழ் புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வாசகர்களுக்கு இலவச பஸ்சேவை இடம்பெறவுள்ளது

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் (29) நல்லூர் தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக்கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்த இலவச பஸ் சேவை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.