தமிழனத்திற்காக போராடிய மாவீரனின் தாய் கிளிநொச்சியில் பிச்சை எடுத்த அவலம்..!

கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபை எல்லைக்குள் பிச்சை எடுத்துவந்த மாவீரரின் தாய்க்கு சிறு கடை ஒன்றை அமைப்பதற்கான பொருட்களையும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கரைச்சி பிரதேசசபை தவிசாளா் வழங்கியுள்ளாா்.

கரைச்சி பிரதேசபையினால் சபை எல்லைக்குள் பிச்சைக்காரா்களை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பிச்சைக்காரா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே இந்த உணா்வுபூா்வமான நடவடிக்கையினை தவிசாளா் வேளமாலிகிதன் மற்றும் பிரதேசபை உறுப்பினா் வசந்தராஜா ஜீவராசா ஆகியோா் மேற்கொண்டிருக்கின்றனா்.