முச்சக்கர வண்டியுடன் கணவன், மனைவி, பிள்ளையை கடத்த முயற்சித்தவா் நையப்புடைப்பு!

உடவல பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியையும் அதன் சாரதி அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த முச்சக்கரவண்டியை வழிமறித்து கடத்த முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்டதை அவதானித்த அப்பிரதேச மக்கள் உடனடியாக செயற்பட்டு கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்

அத்தோடு கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை பிரேதச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் கடத்தலுடன் தொடர்புடைய இருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.