வவுனியாவில் இயங்கிவந்த அம்மாச்சி உணவகத்திற்கு பூட்டு!

வவுனியா ஏ9 வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இயங்கிவந்த பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் எதிர்வரும் 15ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

அம்மாச்சி உணவகத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட மேற்பார்வையின் அடிப்படையில் அம்மாச்சி உணவகத்தில் சில சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் அதனை நிவர்த்தி செய்யுமாறு அம்மாச்சி உணவக நிர்வாகத்தினருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையிலும் அம்மாச்சி உணவகத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டும் அம்மாச்சி உணவகம் நேற்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது.