காதல் என கூறி ஏமாற்றிய யாழ் யுவதி - வளர்முக நாடொன்றில் தாயின் கண்முன்னே தூக்கில் தொங்கிய யாழ் இளைஞன்!

நேற்றையதினம் அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய குறித்த இளைஞன் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் மூத்த சகோதரரன், அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் அவரது சடலத்தை அடையாளம் காண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குமார் பகீதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த யுவதி இளைஞரை ஏமாற்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதன் காரணமாக விரக்தி அடைந்த இளைஞன் தாயாருக்கு தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, வீடியோ காலில் அவர் கண் முன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை பல இளையோர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளமை பலரையும் கவலை கொள்ளசெய்துள்ளது.

இவ்வாறு இளையோர்கள் எடுக்கின்ற திடீர் முடிவுகளால் நாம் மட்டும் அல்லாமல் நம்மை சுற்றியுள்ளோரும் பாதிக்கப்படுவார்கள் என உணர்ந்தால் இத்தகைய உயிரிழப்புக்களை தவிர்க்கலாம்.

தாயின் கண் முன்னே மகன் தற்கொலை செய்து கொள்வது அந்த தாயை உயிருடன் கொல்வதற்கு சமம் என்பதை இன்றைய இளைய சமுதாயத்தில் பலரும் உணர்ந்து பார்ப்பதில்லை.

காதலில் வெற்றி பெற்றவர்கள் தான் இந்த உலகில் வாழவேண்டுமெனில் முக்கால்வாசி நாடும் சுடுகாடாகத்தான் இருக்கும். காதலை தாண்டியும் வாழ்க்கை இருக்கின்றது என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும். வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியே காதல். சிலரிற்கு அது கைகூடும். பலரிற்கு ஏமாற்றத்தினை கொடுக்கும்.

கஸ்ரப்பட்டு பிள்ளைகளை நல்ல நிலைக்கு ஆளாக்கவேண்டுமென எத்தனை பெற்றோர் பட்டிகிடந்து தம் பிள்ளைகளை வளர்த்திருப்பார்கள். உங்கள் விபரீத முடிவிற்கு முன்னர் ஒரு நிமிடம் அவர்களை நினைத்தால் இப்படியான விபரீத முடிவுகளும் மரணங்களும் தவிர்க்கப்படும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாழ்க்கை வாழ்வதற்கே தவிர அழித்துக்கொள்வதற்கு அல்ல.