இளம் யுவதியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்த முதியவருக்கு நேர்ந்தகதி!

இளம் யுவதியை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளார்.

நாவலப்பிட்டி, கோடமட்டிட்ட கிராமத்தை சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்ற இளம்பெண்ணொருவரை அதிகாலை 5 மணிக்கு ஏமாற்றி வீடொன்றிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றார்.

இதன்போது அவர் யுவதியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கியதில் யுவதி காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிவந்த யுவதி, அயலவர்களின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் தாயும், மகள் ஒருவரும் முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியிருந்தனர்.

அந்த சம்பவத்தின் பின்னர் அங்குள்ள மக்கள் விழிப்புடன் இருந்ததால், குறித்த யுவதி காப்பாற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.