பதுளை, மற்றும் மொனராகலையில் ஆலங்கட்டி மழை

பதுளை, மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்றையதினம் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

இதன்போது சுமார் 30 நிமிடங்கள் கடுமையான ஆலங்கட்டி மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

எனினும் இந்த ஆலங்கட்டி மழையால் பயன்தரு மரங்கள் பாதிக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.